கடந்த வாரம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிய தொடர்கள் எது?- டிஆர்பியில் டாப் வந்த தொடர்
சன்-விஜய் டிவி
சின்னத்திரை தான் இப்போது மக்கள் அதிகம் கொண்டாடும் சினிமாவாக உள்ளது. படங்களை தாண்டி சீரியல்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்றே கூறலாம்.
இப்போது சன் டிவியை எடுத்துக் கொண்டால் அன்பே வா, ப்ரியமான தோழி, அருவி என தொடர்ந்து நிறைய ஹிட் சீரியல்களை முடித்துக்கொண்டு வருகிறார்கள்.
அதேவேகத்தில் புத்தம் புதிய தொடர்களையும் களமிறக்கி வருகிறார்கள். இப்போது மல்லி என்ற புதிய தொடர் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோல் விஜய் தொலைக்காட்சியிலும் நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
டிஆர்பி
வாரா வாரம் வியாழக்கிழமை என்றாலே சின்னத்திரை ரசிகர்கள் ஒரு விஷயத்தை முக்கியமாக கவனிப்பார்கள், என்ன அது டிஆர்பி விவரம் தான்.
தற்போது கடந்த வாரத்திற்கான டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது. முதல் 5 இடத்தில் இடம்பெற்றுள்ள சீரியல்களின் விவரம் இதோ,
- சிங்கப்பெண்ணே- 9.25
- கயல்- 8.44
- எதிர்நீச்சல்- 8.06
- வானத்தை போல- 8.05
- சிறகடிக்க ஆசை- 7.24