விஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் வந்த புதிய சீரியல்- பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா
வாரா வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் TRP ரேட்டிங் விவரங்கள் வருவது வழக்கம்.
நேற்று அந்த விவரங்களும் வந்தது, எப்போதும் போல டாப்பில் ரோஜா சீரியல் இடம்பெற்றது, விஜய் டிவி மூக்குத்தி அம்மன் படத்தால் டாப் 5ல் வந்தது.
விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, அதில் கடந்த வாரம் டாப்பில் வந்த சீரியல் குறித்து ஒரு விவரம் வந்துள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியல் தான் ஹிட் லிஸ்டில் டாப்பில் இருந்தது, ஆனால் கடந்த வாரத்தின் நிலவரப்படி பாக்கியலட்சுமி சீரியல் முதன் முதலாக தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியல் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
இந்த தகவல் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது, அதோடு இந்த புகழ் எல்லாம் சீரியலில் கோபி வேடத்தில் நடிப்பவருக்கே சேரும் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.