பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு! பிரதமர் மோடி உட்பட பிரபலங்கள் இரங்கல்
கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் கொரோனா காரணமாக மும்பையில் Breach Candy ஹாஸ்பிடலில் ஜனவரியில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக அவர் ஐசியூவில் இருந்து வரும் நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது உடலில் பல உறுப்புகள் செயலிழந்துவிட்டதால் மரணம் ஏற்பட்டு இருக்கிறது. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
"அவர் வெற்றிடத்தை நாட்டில் விட்டுச்செல்கிறார். அதை யாராலும் நிரப்ப முடியாது. அவரை வருங்கால சந்ததியினரும் நினைவில் வைத்திருப்பார்கள்" என நரேந்திர மோடி ட்விட் செய்திருக்கிறார்.
I am anguished beyond words. The kind and caring Lata Didi has left us. She leaves a void in our nation that cannot be filled. The coming generations will remember her as a stalwart of Indian culture, whose melodious voice had an unparalleled ability to mesmerise people. pic.twitter.com/MTQ6TK1mSO
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
Lata Didi’s songs brought out a variety of emotions. She closely witnessed the transitions of the Indian film world for decades. Beyond films, she was always passionate about India’s growth. She always wanted to see a strong and developed India. pic.twitter.com/N0chZbBcX6
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி வெளியிட்டு இருக்கும் இரங்கல் ட்விட்டில் "லதா மங்கேஷ்கர் இறந்தது பற்றிய சோக செய்தி கிடைத்தது. பல தசாப்தங்களாக அவர் இந்தியாவின் அதிகம் விரும்பப்பட்ட குரலாக இருந்திருக்கிறார். அவரது குரலுக்கு அழிவில்லை, அவரது ரசிகர்கள் மனதில் அது எதிரொலிக்கும்" என தெரிவித்து உள்ளார்.
Received the sad news of Lata Mangeshkar ji’s demise. She remained the most beloved voice of India for many decades.
— Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2022
Her golden voice is immortal and will continue to echo in the hearts of her fans.
My condolences to her family, friends and fans. pic.twitter.com/Oi6Wb2134M