திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து மறைந்த லதா மங்கேஷ்கரின் பல நூறு கோடி ருபாய் சொத்து.. வாரிசு யார்?
இந்திய சினிமாவில் பல தசாப்தங்களாக தனது குரலால் ரசிகர்களை கவர்ந்திழுந்த பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் காலமானார். அவரது மறைவு தேசம் முழுவதும் துக்கமாக அனுசரிக்கப்பட்டது. கொடி அரை கம்பத்தில் பறந்தது. முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, அஸ்தி கோதாவரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
பல நூறு கோடி ருபாய் மதிப்புள்ள சொத்து வைத்திருந்த லதா மங்கேஷ்கர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் அவரது சொத்து தற்போது யாருக்கு சேரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மும்பையில் ஒரு பெரிய வீடு அவருக்கு இருக்கிறது. அது மட்டுமின்றி பல விலையுயர்ந்த சொகுசு கார்களையும் அவர் வைத்திருக்கிறார். நகைகள், உடைகள், கேமரா என பல விலையுயர்ந்த பொருட்கள் அவர் வசம் இருந்தது. அவரது அனைத்து சொத்துகள் மதிப்பு 360 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சொத்துக்கு யார் வாரிசு என்பதை விரைவில் லதா மங்கேஷ்கரின் வக்கீல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.