மறைந்த எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகர் மாரிமுத்துவின் கடைசி படம்- யாருடன் நடித்துள்ளார் பாருங்க
எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியின் டிஆர்பியை அதிகரிக்கும் ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.
இந்த தொடரின் முக்கிய கதாநாயகனாக நடித்து வந்தார் மாரிமுத்து, அவர் சொன்ன இந்தாம்மா ஏய் என்ற வசனம் இப்போதும் மக்களால் கொண்டாடப்படுகிறது. 25 வருடமாக சினிமாவில் இருந்தாலும் எதிர்நீச்சல் தொடர் மூலம் தான் பிரபலம் அடைந்தார்.
அந்த வெற்றியை கொண்டாடி வந்த நேரத்தில் அவரது மறைவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இப்போது எதிர்நீச்சலில் மாரிமுத்துவிற்கு பதிலாக வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரனாக நடித்து வருகிறார்.

புதிய படம்
இன்று மறைந்த நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்துள்ள வீராயி மக்கள் என்ற திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
அதில் மாரிமுத்து, இப்போது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri