மறைந்த கராத்தே ஹுசைனி நடித்த கடைசிப்படம் எது தெரியுமா?
கராத்தே ஹுசைனி
கடந்த 2001ம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் உடற்பயிற்சியாளராக நடித்திருந்தவர் கராத்தே ஹுசைனி.
கராத்தே பயிற்றுவிப்பாளராக தனது சாதனைகளை செய்தவருக்கு பத்ரி படம் தான் பிரபலத்தை கொடுத்தது. அதனைத்தொடர்ந்து ஹுசைனி அதிரடி சமையல் என்ற ஒரு சமையல் நிகழ்ச்சி அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நகைச்சுவை கலந்து நடித்திருப்பார். நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் மட்டுமின்றி பலருக்கும் ஹுசைனி கராத்தே பயிற்சி அளித்துள்ளார்.

சினிமா, கராத்தே கலையை தாண்டி வில் வித்தை பயிற்சியாளராகவும் திகழ்ந்த ஹுசைனி, 400-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
கடைசி படம்
இன்று ஹுசைனி நம்முடன் இல்லை, ஆனால் அவர் கடைசியாக நடித்துள்ள Chennai City Gangsters படம் விரைவில் வெளியாக உள்ளது. வைபவ், அதுல்யா நடித்துள்ள இப்படம் வரும் ஜுன் 20ம் தேதி வெளியாகவுள்ளது.

கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri