ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் கடைசி ஆசை என்ன தெரியுமா?- அதுவும் நடக்கவில்லையா?
தென்னிந்திய சினிமாவில் 1970ம் ஆண்டு தொடங்கி 2000 ஆண்டு வரை பிரபலமாக நடித்து வந்தவர் ஸ்ரீவித்யா. புகழ்பெற்ற நடிகையான இவர் எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
கர்நாடக இசை பாடகி எம்.எல். வசந்தகுமாரியின் மகள் தான் இவர். சினிமா வாழ்க்கையில் ஜொலித்திருந்தாலும் சொந்த வாழ்க்கையில் கடும் கஷ்டத்தை சந்தித்துள்ளார்.
1976ம் ஆண்டு ஜார்ஸ் தாமஸ் என்பவரை திருமணம் செய்த நடிகை 1980ல் விவாகரத்து பெற்றார். பின் தனியாக வாழ்ந்து வந்த நடிகைக்கு 2003ம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலன் இன்றி 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.
கடைசி ஆசை
ஏராளமான சொத்துக்கு சொந்தக்காரியான நடிகை ஏழை, எளிய மக்களுக்கு தனது சொத்துக்கள் போய் சேர வேண்டும் என மரண படுக்கையில் சொத்துக்கள் எழுதி அவருக்கு நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் இதில் என்ன சோகம் என்றால் அவரது கடைசி ஆசை நிறைவேறவே இல்லையாம். அவரது சொத்துக்கள் ஒரு ஏழைக்கு கூட போய் சேரவில்லை என்கின்றனர்.
பிக்பாஸ் புகழ் ஜுலியா இது, திடீரென இப்படி ஒரு Makeover ஆ- செம மாற்றம், புகைப்படத்துடன் இதோ

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
