மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்து பிரபலங்களின் மரண செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
கடந்த பிப்ரவரி 6ம் தேதி இந்திய சினிமா ரசிகர்கள் வருத்தம் அடையும் அளவிற்கு வந்த செய்தி பாடகி லதா மங்கேஷ்கர் மரணம். பாரத ரத்னா, பிலிம்பேர் என நிறைய உயரிய விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
இவர் இறந்ததில் இருந்து பிரபலங்கள் அவரது பாடலை பாடியும், நடனம் அமைத்தும் பாடகியை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்களை பாடி, பல சாதனைகளை புரிந்த அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை, காரணம் அவரது அப்பாவின் இறப்பு என்று கூறுகின்றனர்.
லதா மங்கேஷ்கருக்கு மொத்தம் ரூ. 368 கோடிக்கு சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தனது சொத்துக்களை அவர் தனது அப்பாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதற்கு தனது சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறாராம்.