மறைந்த நடிகை சித்ராவின் இறுதி திரைப்படம் செய்த சாதனை.. முன்னணி நடிகர்களுக்கு இணையான ஒன்று
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் நம்மை அனைவரின் மனதையும் கொள்ளைக்கொடிருந்த நடிகை சித்ரா, தீடீரென சென்ற மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என்று சித்ரா தாயார் காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார்.
இதன்பின் சித்ராவின் மேல் பல குற்றங்களை கூறி, காவல் ஆணையரிடம் ஹேமந்த்தின் தந்தை புகார் அளித்திருந்தது அதிர்ச்சியை அளித்திருந்தது.
தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் இதுவரை வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் சித்ராவின் கைப்பையில் இருந்து கஞ்சா கிடைத்துள்ளது என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் நடிகை சித்ராவின் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள கால்ஸ்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் இதுவரை 1 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை செய்துள்ளது சித்ராவின் கால்ஸ்.