சின்னத்திரை பிரபலங்களுடன் VJ சித்ரா எடுத்துக்கொண்ட செல்பி, முக்கிய தொகுப்பாளினி வெளியிட்ட போட்டோ
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு தொடருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த VJ சித்ரா ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
மேலும் இவரின் கணவர் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், இதனால் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
இந்நிலையில் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக காவ்யா என்பவர் நடித்து வருகிறார், அவரும் முல்லையாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
மேலும் தற்போது பிரபல தொகுப்பாளினி திவ்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் VJ சித்ரா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டு அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் அவருடன் சீரியல் நடிகை சரண்யாவும் உள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

குடும்பம் முக்கியம்தான்.. ஆனால் அதுக்காகவா வந்துருக்கீங்க - கோலி,ரோகித்தை சாடிய கம்பீர் IBC Tamilnadu
