பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை கவலைக்கிடம்.. அதிர்ச்சி நியூஸ்
‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வென்டிலேட்டர்' மூலம் சுவாசித்து வந்த அவரது உடல்நிலை, முன்னேற்றம் ஆவதாக சில நாட்களுக்கு முன் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. அவர் கவலைக்கிடமாக உள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. லதா மங்கேஷ்கர் விரைவில் குணமடைந்து விடு திரும்ப அனைவரும் பிராத்தனை செய்வோம்.