டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் என்ன? பொறுப்பேற்ற பிஷ்னோய் கும்பல்

By Karthick Raja Oct 19, 2026 06:04 AM GMT
Report

Lawrence Bishnoi gang targeted actor Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. அதற்கான காரணம் என்னவென்று என்பதையும் தெரிவித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

டைகர் ஷெராப்

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் டைகர் ஷெராப். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஜுஹு பகுதியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு தனது காரில் கிளம்பியபோது, திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நடிகர் டைகர் ஷெராப் லேசான கீறல்களுடன் உயிர் தப்பினார். ஆனால், கார் டிரைவர் மற்றும் அருகில் இருந்து ஆட்டோ டிரைவர் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் என்ன? பொறுப்பேற்ற பிஷ்னோய் கும்பல் | Lawrence Bishnoi Gang Targeted Actor Tiger Shroff

நடிகர் டைகர் ஷெராப்பை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு கடும் அதிர்ச்சியை பாலிவுட் திரையுலகினருக்கு கொடுத்துள்ளது.

போலீஸ் விசாரணை

இச்சம்பவம் நடந்த தகவல் அறிந்த போலீஸ் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் காவல்துறையினரை கொண்டு 15 தனிப்படைகளை அமைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தடயவியல் நிபுணர்கள், சேகரித்து தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் என்ன? பொறுப்பேற்ற பிஷ்னோய் கும்பல் | Lawrence Bishnoi Gang Targeted Actor Tiger Shroff

நலம் விசாரிப்பு

துப்பாக்கிச் சூடு நடந்து சிறு காயங்களுடன் தப்பிய நடிகர் டைகர் ஷெராப்பை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் என்ன? பொறுப்பேற்ற பிஷ்னோய் கும்பல் | Lawrence Bishnoi Gang Targeted Actor Tiger Shroff

பொறுப்பேற்ற பிஷ்னோய் கும்பல்

இந்த நிலையில், தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. நடிகர் சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால்தான் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த காரணம் என்ன? பொறுப்பேற்ற பிஷ்னோய் கும்பல் | Lawrence Bishnoi Gang Targeted Actor Tiger Shroff

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US