பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டல்... பதற்றமான தகவல்
சல்மான் கான்
கடந்த 1998ம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சல்மான் கான் விடுவிக்கப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
கொலை மிரட்டல்
தற்போது சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜில், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால் லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும்.
பணம் கொடுக்கவில்லை என்றால் சல்மான் கானின் நிலை பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும் என அனுப்பியுள்ளனர்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
