லீடர் திரை விமர்சனம்

By Tony Apr 03, 2026 09:10 AM GMT
Report

லெஜண்ட் சரவணன் நடிப்பில் முதல் படம் சறுக்கினாலும் இரண்டாவது படம் எப்படியாது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என துரை செந்தில்குமார் இயக்கம், ஜிப்ரான் இசை என வலுவான டீமுடன் தன் இரண்டாம் படத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார், இந்த கூட்டணி அவருக்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.

லீடர் திரை விமர்சனம் | Leader Movie Review

கதைக்களம் 

தென் தமிழகத்தில் ஒரு ஹார்பர்-ல் சட்டத்திற்கு புறம்பாக ஒரு கண்டெய்னர் வருகிறது. அந்த ஊரில் லெஜண்ட் சரவணன் தன் மகளோட ஒரு மெக்கானிக் கடையில் மெக்கானிக் ஆக வாழ்க்கையை நடத்தி வருகிறார், அம்மா இல்லாமல் தன் மகளை உயிராக நினைத்து வாழ்கிறார். 

 அதே நேரத்தில் இன்ஸ்பெகர் ஆண்ட்ரியா அந்த கண்டெய்னரில் ஏதோ உள்ளது. கண்டிப்பாக அதை வெளியே கொண்டு வர வேண்டும் என போராட, ஒரு கட்டத்தில் சரவணனுக்கு அந்த ஹார்பரில் சால்ட் என்ற தாதா கார்-யை சர்விஸ் விட்டு அடிக்கடி அங்கு செல்லும் நிலை உருவாகிறது.

லீடர் திரை விமர்சனம் | Leader Movie Review

சரி இது தான் வாய்ப்பு ர்ன ஆண்ட்ரியா , சரவணன் மகளை மறைத்து வைத்து விட்டு, சால்ட் தான் உன் மகளை கடத்தினான் என்பது போல் திசை திருப்பி அவர் கையாலேயே அந்த கண்டெய்னரை வெளியே கொண்டு வருகிறார்.

ஆனால், அதன் பின்பு தான் தெரிகிறது, இந்த அத்தனை ஸ்கெட்ச் போட்டது ஆண்ட்ரியா இல்லை, சரவணன் தான், எதற்காக இப்படி செய்தார், ஏன் செய்தார் என்பதன் மர்மமே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

லெஜண்ட் சரவணன் முதல் படத்தை விட அத்தனை முன்னேற்றம், மகளுடன் பாசம், மகளுக்கால எந்த எல்லைக்கும் செல்லும் போரட்டம், ஆக்‌ஷன் என ஒரு மாஸ் ஹீரோவாக ஜெயித்துவிட்டார், கண்டிப்பாக அடுத்தடுத்து இவர் படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகும் படி ஒரு படத்தை கொடுத்துவிட்டார்.

இந்த அத்தனை கிரிடிட்ஸும் இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு தான், சரவணன் அவர்களுக்கு என்ன வருமோ அதை சரியாக பயன்படுத்தி சூப்பராக கொடுத்துள்ளார்.

லீடர் திரை விமர்சனம் | Leader Movie Review

காளிதாஸ் 2 திரைவிமர்சனம்

காளிதாஸ் 2 திரைவிமர்சனம்

ஆண்ட்ரியா, ஷாம் என அனைவருமே நல்ல நடிப்பை தர, வில்லனாக வரும் சந்தோஷ் கதாபாத்திரம் அவரை சார்ந்து வரும் டுவிஸ்ட் எல்லாமே தியேட்டர் மொமண்ட் ஆக ஒர்க் ஆகியுள்ளது.

என்ன கதைக்களம் தான் நாம் பல மாஸ் படங்களில் பார்த்தது, ஆனால், அதில் திரைக்கதையை வேகவேகமாக அமைத்தது படத்திற்கு பலமாக உள்ளது, படம் ஆரம்பித்து கதைக்குள் செல்லுவரை கொஞ்சம் பொறுமையாக சென்றாலும் சரவணன் vs சால்ட் என்று மாறும் போது கதை சூடு பிடிக்க, இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் ட்ரெயின் சண்டை காட்சி பீக் ஆகிறது.

லீடர் திரை விமர்சனம் | Leader Movie Review

டெக்னிக்கலாக படம் ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே சூப்பர், அதிலும் ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல்.

க்ளாப்ஸ்

திரைக்கதை

நடிகர்கள் பங்களிப்பு

டெக்னிக்கல் ஒர்க்

சண்டைக்காட்சிகள் மற்றும் டுவிஸ்ட்

பல்ப்ஸ்

சில மாஸ் படத்தில் பார்த்த அதே டெம்ப்ளேட் சீன்ஸ்

மொத்தத்தில் லீடர் மகுடம் சூட்டினார்.  

லீடர் திரை விமர்சனம் | Leader Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US