அன்புடன் குஷி சீரியலில் இருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை- ஷாக்கான ரசிகர்கள்
சீரியல் ஆரம்பத்தில் எந்த நடிகர்கள் கமிட்டாகிறார்களோ அவர்களே இறுதி வரை இருந்தால் தான் மக்களுக்கு பிடிக்கிறது.
நன்றாக சீரியல் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென கதையின் முக்கிய நாயகன், நாயகி மாற்றம் சில சீரியல்களில் நடக்கிறது.
இதனால் அந்த ஹிட் சீரியலின் TRP உடனே இறங்கிவிடுகிறது. அதற்கு உதாரணமாக நிறைய சீரியல்களை கூறலாம்.
இப்போது அப்படி தான் ஒரு சீரியலில் இதுவரை ஒரு கதாபாத்திரத்திற்கு நாயகி மாற்றம் ஏற்பட்டு ஒருவர் நடித்து வந்தார்.
இப்போது அந்த நாயகியும் சீரியலில் இருந்து வெளியேறுகிறாராம். அன்புடன் குஷி சீரியலில் நடுவில் நடிக்க வந்தவர் ரேஷ்மா. தற்போது இவரும் சீரியலில் இருந்து விலகுகிறாராம்.
காரணம் என்ன என்று கூறவில்லை, ஆனால் கவலைப்படாதீர்கள், அடுத்தே ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் சீரியலில் இனி இல்லை என்பதை அறிந்து ரசிகர்கள் கொஞ்சம் சோகமாக தான் உள்ளார்கள்.