Lee Cronin's The Mummy திரை விமர்சனம்

Report

லீ க்ரோனின் இயக்கத்தில் ஜாக், லையா நடிப்பில் ஹாரர் திரில்லராக வெளிவந்துள்ள தி மம்மி ரசிகர்களை கவர்ந்தா? பார்ப்போம்.

கதைக்களம்

நாயகன் ஜாக் தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். Egypt நாட்டில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வரும் இவரின் 8 வயது மகளை பக்கத்துட வீட்டு பெண் ஒருவர் கடத்துகிறார்.

அதை தொடர்ந்து அவர் என்ன ஆனார், எங்க போனார் என்பதே தெரியவில்லை. அப்படியே 8 வருடம் ஓடுகிறது, அந்த நேரத்தில் ஒரு விமான விபத்து நடக்கிறது.

அந்த விமானத்திலிருந்து ஒரு சிவபெட்டி இருக்க, அதில் நாயகன் ஜாக் மகள் 8 வருடத்திற்கு முன்பு தொலைந்து போனவர் இருக்கிறார். அவர் மிகவும் மோசமான நிலையில் பிரம்மை பிடித்தது போல் அதில் இருக்கிறார்.

எப்படியாவது தன் மகளை மீட்டு பழைய வாழ்க்கைக்கு கொண்டு வர வேண்டும் என நாயகன், நாயகி போராட, அதன் பின் நடந்த அமானுஷியமே இந்த மம்மி மீதிக்கதை.

Lee Cronin

படத்தை பற்றிய அலசல்

மம்மி படம் என்றாலே நாம் இதுவரை செம ஜாலியாக, கொண்டாட்ட மனநிலையுடன் பார்த்து இருப்போம், ஏனெனில் அந்தளவிற்கு சிஜி காட்சிகள், பிரமாண்டம் என இருக்கும்.

ஆனால், இந்த மம்மி முற்றிலும் மாறுப்பட்டது, இயக்குனர் Lee cronin ஏதோ கான்ஜுரிங் படம் போல் எடுத்துள்ளார், மகள் கேட்டி-க்கு என்ன ஆனது என்ற பதட்டத்துடன் அப்பா, அம்மா பரிதவிக்கும் காட்சி, கேட்டி ஏன் இப்படி செய்கிறார் என்ற பல கேள்விகளாகவே படம் செல்கிறது.

படம் செல்ல செல்ல அதற்கான விடை, நம்மை அதிர வைக்கிறது காட்சிகளாக, கண்டிப்பாக ஹாரர் பட ரசிகர்களுக்கு செம விருந்து அந்த காட்சிகள் எல்லாம்.

ஆனால், ஹாரர் தாண்டி இந்த படத்தில் கேட்டி தேள்-யை கடித்து சாப்பிடுவது, நகங்களால் தன் முகத்தை கீறுவது, கால் தோல்-யை உறிப்பது என நம்மால் பார்க்கவே முடியாத காட்சிகள் நிறைய உள்ளது, அதை மனதில் வைத்து படத்திற்கு செல்லுங்கள்.

கண்டிப்பாக குழந்தைகளுடன் இந்த படத்தை பார்க்க முடியாது, மம்மி என்றதும் ஜாலியாக இருக்கும் என நினைத்து செல்ல வேண்டாம்.

படம் கொஞ்சம் மெதுவாகவே செல்கிறது, அதுவும் இந்த களத்திற்கு தேவை என்பதாலேயே என புரிந்துகொள்ள முடிகிறது.

டெக்னிக்கலாக படத்தின் ஒளிப்பதிவு பல காட்சிகளில் முக்கியமாக இருளில் மிரட்டுகிறது, அளவான பின்னணி இசையாலேயே நம்மை பதபதக்க வைக்கின்றனர்.

க்ளாப்ஸ்

திரைக்கதை

நடிகர்கள் பங்களிப்பு, முக்கியமாக கேட்டியாக நடித்தவர்

ஹாரர் காட்சிகள்

பல்ப்ஸ்

மிகவும் முகம் சுளிக்கும்படியான காட்சிகள்.

மம்மி என்ற டைட்டிலை நம்பி பரபரவென வந்தவர்களுக்கு ஏமாற்றமாக அமையும்.

மொத்தத்தில் தி மம்மி ஹாரர் பட விரும்பிகள் கண்களை மூடிக்கொண்டு டிக்கெட் புக் செய்யலாம்.

Rating: 3/5  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US