கால் நடக்கமுடியவில்லை என்றாலும் சிம்புவின் மாநாடு படம் பார்க்க வந்த ரசிகர்- நெகிழ்ச்சியான வீடியோ
சிம்பு என்றாலே போராட்டம் என்பது போல் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு பிரச்சனையில் சிக்கி படாத கஷ்டங்களை அனுபவித்தார்.
அதில் இருந்து சரியாக படங்கள் நடிக்க முடியாமல் வீட்டிலேயே இருந்தார். பின் நடிக்க தொடங்க இடையில் கொரோனா வந்து எல்லோரையும் வீட்டில் முடக்க வைத்தது.
அந்த நேரத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைத்து புதிய மனிதராக மாறினார். அதன்பிறகு ஈஸ்வரன் படத்தில் நடித்தஅவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து முடித்தார்.
இப்படம் தயாராகி ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்தித்தது, ரிலீஸிற்கு முன்தினம் கூட படம் வருதா வராதா என்ற சந்தேகம் இருந்தது.
கடைசியில் ஒருவழியாக படம் இன்று வெளியாகிவிட்டது, ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
கால் நடக்க கூட முடியாத ஒரு ரசிகர் சிம்புவின் மாநாடு படம் பார்க்க திரையரங்கிற்கு வந்தது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதோ பாருங்கள்,
#Maanaadu craze for for Thalaivan is ??? #FDFS @SilambarasanTR_ @vp_offl @Premgiamaren @MahatOfficial @hariharannaidu pic.twitter.com/EHUeaQusB3
— ManojkannanKing (@MK_PeacefulSoul) November 25, 2021