ஆட்டோ டிரைவர்களுடன் அமர்க்களமாக ஆயுத பூஜை கொண்டாடிய லெஜெண்ட் சரவணன்

By Yathrika Oct 25, 2023 07:30 PM GMT
Report

தி லெஜண்ட் சரவணன்

பிரபல தொழிலதிபரும் திரைப்பட நடிகருமான லெஜெண்ட் சரவணன் சென்னை தி. நகரில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து ஆயுத பூஜையை கொண்டாடினார்.

ஆயுத பூஜை விழாவுக்கு வருகை தந்த லெஜெண்ட் சரவணனுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனது 57வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை நதியா- வீடியோவுடன் இதோ

தனது 57வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை நதியா- வீடியோவுடன் இதோ

அவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தார். பின்னர் உரையாற்றிய லெஜெண்ட் சரவணன், "அயராத உழைப்பு மற்றும் அன்பு ஆகியவை எனக்கு மிகவும் பிடித்த இரண்டு விஷயங்கள் ஆகும், அனைவரும் அன்பு செலுத்த வேண்டும்.

நாம் எவ்வளவு அன்பு செலுத்துகிறோமோ அவ்வளவு அன்பு நமக்கு திரும்பி வரும்," என்றார். தொடர்ந்து பேசிய அவர், "நாம் எதை விதைக்கிறோமோ அது நமக்கு பன்மடங்கு திரும்ப கிடைக்கும்.

ஆட்டோ டிரைவர்களுடன் அமர்க்களமாக ஆயுத பூஜை கொண்டாடிய லெஜெண்ட் சரவணன் | Legend Saravanan Ayudha Pooja With Auto Drivers

எனவே நாம் அனைவரும் மனித நேயத்தை மலர வைக்க அன்பு செலுத்தி மகிழ்வோம்," என்று கூறினார். பின்னர் லெஜெண்ட் சரவணனுடன் ஆட்டோவில் பயணிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்ட அவர், "ஆனால் ஒரு நிபந்தனை. ஆட்டோவை நான் தான் ஓட்டுவேன்," என்று கூறியதோடு, அவர்களை ஒரு ஆட்டோவில் அமர வைத்து உற்சாகத்துடன் அதை ஓட்டினார்.

லெஜெண்ட் சரவணனுடன் இணைந்து ஆயுத பூஜை கொண்டாடியது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  

ஆட்டோ டிரைவர்களுடன் அமர்க்களமாக ஆயுத பூஜை கொண்டாடிய லெஜெண்ட் சரவணன் | Legend Saravanan Ayudha Pooja With Auto Drivers

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US