லெஜெண்ட் சரவணன் நடிப்பில், பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம்..
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம். ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்க, ஷாம், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'தி லெஜெண்ட்' திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார்.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய 'கருடன்' பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம்: துரைராஜ், நிர்வாக தயாரிப்பு: அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு: தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ், சண்டை காட்சிகள்: மேத்யூ மகேஷ், தயாரிப்பு நிர்வாகி: சின்னமனூர் சதீஷ், புரொடக்ஷன் மேலாளர்கள்: முனுசாமி, ஆர் எஸ் கோவிந்தராசு.
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தை தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
