சிவகார்த்திகேயன், தனுஷ் இயக்குனருடன் கைகோர்க்கும் லெஜண்ட் சரவணன்.. மாஸ் கூட்டணி

Kathick
in பிரபலங்கள்Report this article
லெஜண்ட் சரவணன்
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன்.
முதல் படமே ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படம் குறித்து இதுவரை அவர் அறிவிக்கவில்லை. ஆனால், விரைவில் தன்னுடைய இரண்டாவது படத்தை அறிவிப்பேன் என அவர் கூறியுள்ளார்.
லெஜண்ட் சரவணன் இரண்டாவது படம்
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
எதிர்நீச்சல், கோடி, காக்கி சட்டை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ள செய்தி தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.
நல்ல இயக்குனரை லெஜண்ட் சரவணன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.