விஜய் சார் படம் மாதிரி இருக்கும்.. அவர் போயிட்டாரு, நான் இப்போ எடுக்கிறேன்: லெஜெண்ட் சரவணன்

By Parthiban A Sep 24, 2026 02:51 PM GMT
Report

தொழிலதிபராக இருந்து தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் லெஜெண்ட் சரவணன். அவர் லெஜெண்ட், லீடர் என இரண்டு படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் அடுத்து மூன்றாவது படம் பற்றிய அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டுள்ளார். ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தனது அடுத்த படம் பற்றி பேசி இருக்கிறார்.

விஜய் சார் படம் மாதிரி இருக்கும்.. அவர் போயிட்டாரு, நான் இப்போ எடுக்கிறேன்: லெஜெண்ட் சரவணன் | Legend Saravanan Next Will Be Like Vijay Movie

விஜய் படம் மாதிரி இருக்கும்

என் அடுத்த படத்திற்கான டெக்னிஷியன்கள், நடிகர்கள் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இது ஒரு triple ஆக்ஷன் படம். நீங்க நினைத்தபடி ஒரு மாஸ் சாங் இருக்கும், குத்து பாடல் இருக்கும். ஒரு நல்ல விஜய் சார் படம் போல இருக்கும்.

அவர் இப்போ சிஎம் ஆகி போயிட்டாரு. அவர் படம் நடிப்பதில்லை என சொல்லியிருப்பதால், அவர் நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி என்னுடைய படம் இருக்கும்.

இவ்வாறு லெஜெண்ட் சரவணன் பேசி இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US