விரைவில் சந்திக்கிறேன்.. 'தி லெஜண்ட்' ஹீரோ சரவணனின் அடுத்த அறிவிப்பு
'தி லெஜண்ட்' படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார் லெஜண்ட் சரவணன். இதற்கு முன் தனது கடையின் விளம்பர படங்களில் நடித்து அதிகம் பிரபலமான அவர் தனது சொந்த தயாரிப்பில் தி லெஜண்ட் படத்தில் நடித்து இருக்கிறார்.
கடந்த ஜூலை 28ம் தேதி தி லெஜண்ட் ரிலீஸ் ஆன நிலையில் கலவையான விமர்சனங்களை தாண்டி குறிப்பிடத்தக்க வசூலும் கிடைத்து இருக்கிறது. அறிமுக ஹீரோவுக்கு கிடைத்திருக்கும் இந்த வசூல் பற்றி பாசிட்டிவ் ஆன பாக்ஸ் ஆபிஸ் விவரங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

விரைவில் சந்திக்கிறேன்..
இந்நிலையில் லெஜண்ட் சரவணன் தற்போது 'விரைவில் சந்திக்கிறேன்…சந்திக்கிறோம்..' என கூறி இருக்கிறார்.
அதனால் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது போல லெஜண்ட் வெற்றி விழாவையும் பெரிய அளவில் ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள் என தெரிகிறது.
