விவாகரத்தான நடிகரை காதலிக்கும் நடிகை லேகா வாஷிங்டன்... டாப் நடிகரின் உறவினர் தானா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
லேகா வாஷிங்டன்
தமிழில் காதலர் தினம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் லேகா வாஷிங்டன்.
அப்படத்திற்கு பிறகு உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் ஒரு ஆங்கிய படத்திலும் நடித்திருக்கிறார்.
சினிமாவில் காணாமல் போன இவர் குறித்து தற்போது ஒரு தகவல் வலம் வருகிறது.
நடிகையின் காதல்

கடும் நோயால் ஏற்பட்ட பாதிப்பு, தெருவில் விட்ட குடும்பம்- நடிகை பானுப்ரியா வாழ்க்கையில் ஏற்பட்ட சோக கதை
அதாவது 37 வயதாகும் லேகா வாஷிங்டன் விவாகரத்து ஆன ஒரு நடிகரை காதலித்து வருகிறாராம்.
அவர் வேறுயாரும் இல்லை நடிகர் அமீர்கானின் உறவினர் இம்ரான் கான் தானாம்.
இதுகுறித்து இம்ரான் கான் ஒரு பேட்டியில், என் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் ஆரோக்கியத்தை லேகா வாஷிங்டன் தான் ஏற்படுத்தினார்.
நான் மன அழுத்தத்தில் இருந்த போது எனக்கு உதவியாக இருந்தவர் அவர்தான், என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்.
அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை என்னால் தொடர முடியுமா என்று தெரியவில்லை என பேசியுள்ளார். தற்போது காதலை இம்ரான் கான் உறுதிப்படுத்த அனைவரும் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இம்ரான் கான் அவந்திகா என்பவரை 2011ம் ஆண்டு திருமணம் செய்து 2019ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.