லெனின்: திரை விமர்சனம்

By Sivaraj Jul 11, 2026 04:30 AM GMT
Report

அகில் அக்கினேனி, பாக்யஸ்ரீ ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள லெனின் தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

லெனின்: திரை விமர்சனம் | Lenin Movie Review

கதைக்களம்

1976ஆம் ஆண்டில் ஸ்ரீராமபுரம் என்ற ஊருக்கு வருகிறான் ஆதரவற்ற சிறுவனான லெனின். அங்கு பாரதம் மிட்டா திருவிழாவில் நடைபெறும் சூழலில், கோவில் கோபுரத்தில் யார் கொடியை நடுவது என்ற பிரச்சனை நடக்கிறது.

அப்போது திடீரென லெனின் கொடி எடுத்துக்கொண்டு மேலேறி நட உடனே மழைபொழிகிறது. இதனால் கிராம மக்கள் லெனினை தங்கள் வீட்டு பிள்ளையாக ஏற்றுக் கொள்கின்றனர்.

லெனின்: திரை விமர்சனம் | Lenin Movie Review

குறிப்பாக, செல்வாக்குமிகுந்த ஈஸ்வரி ராவ் லெனினை தனது இன்னொரு மகனாக வளர்க்கிறார். அவரது மகன் வசந்த் வெளியூரில் படிக்க, லெனின் உள்ளூரில் இருந்து பல வேலைகளை பார்த்துக்கொள்கிறார். ஊரில் மற்றொரு செல்வாக்குமிக்க நபரான ராம்கியின் இரண்டாவது மகள் பாரதியை காதலிக்கிறார் லெனின்.

அதே சமயம் பாரதியின் அக்கா வைதேகிக்கும், வசந்திற்கும் திருமண நிச்சயம் செய்யப்படுகிறது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதன் விளைவாக லெனினுக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னப்பட, அவர் என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.

லெனின்: திரை விமர்சனம் | Lenin Movie Review

படம் பற்றிய அலசல்

நடிக்க நாகர்ஜுனா தனது மகனை மாஸ் ஹீரோவாக்க வேண்டும் என்ற முயற்சியில் தானே இப்படத்தை தயாரித்திருக்கிறார். தயாரிப்பில் எந்தவித சமரசமும் செய்யவில்லை என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது.

தமிழில் ஹரி படங்களில் வருவதுபோல் அத்தனை கதாபாத்திரங்கள் படத்தில் வருகின்றன. என்றாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நேர்த்தியாக எழுதியிருக்கிறார் இயக்குநர் முரளி கிஷோர் அப்புரு. முதல் பாதி வழக்கமான தெலுங்கு சினிமாவாக நகர திடீரென ஒரு ட்விஸ்ட் அட என்று சொல்ல வைக்கிறது.

லெனின்: திரை விமர்சனம் | Lenin Movie Review

இதயம் முரளி திரை விமர்சனம்

இதயம் முரளி திரை விமர்சனம்

இடைவேளைக்கு பின் பல ட்விஸ்ட்களை வைத்து பரபரப்பாகவே கொண்டு சென்றுருக்கிறார் இயக்குநர். குறிப்பாக கிளைமேக்ஸ் கண்டிப்பாக யாருமே எதிர்பாக்காத ஒன்று. இயக்குநர் முரளி கிஷோர் முடிச்சுகளை கட்டவிழ்த்த விதம் அருமை.

மாஸ் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அகில் அக்கினேனி கடினமாக உழைத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். லெனின் கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்திருக்கிறார். சென்டிமென்ட், ரொமான்ஸ், ஆக்ஷன் என எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.

லெனின்: திரை விமர்சனம் | Lenin Movie Review

தனியாக காமெடி மட்டும் செய்துவிட்டால் அப்பா நாகர்ஜூனாவின் இடத்திற்கு வர வாய்ப்புள்ளது. அழகு பதுமையாக அறிமுகமாகும் பாக்யஸ்ரீ போர்ஸ், பாரதி என்ற கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி போகிறார்.

ரொமான்ஸிலும், டான்ஸிலும் அசத்துகிறார். ஈஸ்வரி ராவ், சிவாஜி, பிரம்மாஜி, ராம்கி, பிரமோத் பஞ்சு என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்துள்ளனர். தமனின் இசையில் பாடல்கள் அருமை, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவும், நவீன் நூலியின் படத்தொகுப்பும் கச்சிதம்.

க்ளாப்ஸ்

அகில், பாக்யஸ்ரீ

திரைக்கதை

ட்விஸ்ட்

இசை

பல்ப்ஸ்

ஒரு சில லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் இந்த லெனின் வென்றுவிட்டான். கமர்ஷியல் பட விரும்பிகளுக்கு செம ட்ரீட் இப்படம். 

லெனின்: திரை விமர்சனம் | Lenin Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US