தமிழ்நாட்டில் மட்டுமே லியோ இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா.. விவரம் இதோ
லியோ
விஜய் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் உலகளவில் வெளிவந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை லலித் குமார் தயாரித்திருந்தார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக பின்தங்கி இருந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
அரபு நாடுகள், கர்நாடகா, கேரளா, ஹிந்தி, சிங்கப்பூர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற இடங்களில் தன்னுடைய லாப கணக்கை லியோ படம் துவங்கிவிட்டது. மேலும் ஹிந்தியில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது.
தமிழக வசூல்
உலகளவில் இதுவரை ரூ. 475 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள லியோ படம் தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, லியோ படம் கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 172 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu