உலகளவில் வசூல் சாதனை படைக்கும் லியோ.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா
லியோ
லியோ இந்த ஆண்டு மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நின்றுபோனதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

ஆனால், அதை சரிக்கட்டும் விதமாக லியோ படத்தின் இரண்டாவது பாடல் Badass இன்று வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் இந்த பாடலை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். லியோ படத்தின் வெளிநாடு புக்கிங் ரிலீஸுக்கு 40 நாட்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது.
அட்வான்ஸ் சேல்ஸ்
இந்நிலையில் லியோ படத்திற்கு உலகளவில் அட்வான்ஸ் புக்கிங்கில் மாபெரும் ஓப்பனிங் கிடைத்துள்ளது. குறிப்பாக UK, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் ரூ. 6 கோடிக்கும் மேல் அட்வான்ஸ் சேல்ஸ் ஆகியுள்ளது என தெரியவந்துள்ளது. இது லியோ படத்திற்கு கிடைத்துள்ள பிரமாண்ட ஓப்பனிங் என கூறப்படுகிறது.

டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri