ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூலை அடித்து நொறுக்கிய லியோ.. ரிலீஸுக்கு முன்பே வசூல் வேட்டை
லியோ
தற்போதைய தமிழ் சினிமாவின் பேசு பொருளாக இருக்கும் விஷயம் லியோ தான். இசை வெளியிட்டு விழா நின்றுபோனதில் இருந்து படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.
இசை வெளியிட்டு விழா நடந்திருந்தால் கூட இப்படி பேசியிருப்பார்களா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு ப்ரோமோஷன் கிடைத்துவிட்டது. நேற்று இப்படத்தின் இரண்டாவது பாடல் Badass வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்ததாக டிரைலருக்காக தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். அடுத்த வாரம் டிரைலர் வெளியாகிறது என தகவல் கூறப்படுகிறது. லியோ படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் ஆரம்பமாகி பட்டையை கிளப்பி வருகிறது.
ஜெயிலரை அடித்து நொறுக்கிய லியோ
இந்நிலையில், ஜெர்மனியில் இதுவரை 2500 டிக்கெட்ஸ் வரை விற்பனை ஆகியுள்ளது இதன்மூலம் எதிர்பார்க்காத ப்ரீ புக்கிங் வசூல் வந்துள்ளதாம்.
இந்த வசூலின் அடிப்படையில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு பின் வந்த ஒட்டுமொத்த வசூலை, ரிலீஸுக்கு முன்பே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது லியோ.
ஜெயிலர் மட்டுமின்றி பொன்னியின் செல்வன் பட வசூலையும் லியோ படம் முறியடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெயிலர் படம் ஜெர்மனியில் பெரிதளவில் ரிலீஸ் ஆகவில்லை.
அதனால் தான் அப்படத்தின் வசூல் குறைவு. ஆனால், லியோ பல திரையரங்கங்களில் வெளியாகிற காரணத்தினால் ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் அதிகமாக இருக்கிறது என கூறப்படுகிறது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
