துணிவு படத்தின் மொத்த வசூலையும் முறியடித்த லியோ.. ரிலீஸுக்கு முன்பே வசூல் சாதனை
துணிவு
இந்த ஆண்டு முதல் வெற்றியை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்த திரைப்படம் துணிவு. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
துணிவு படம் உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை படைத்தது. இதற்குமுன் எந்த ஒரு அஜித் திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை கூட துணிவு செய்தது.
துணிவு சாதனையை முறியடித்த லியோ
குறிப்பாக USA-வில் $ 850K வரை வசூல் செய்திருந்தது. ஆனால், அந்த வசூல் சாதனையை தற்போது லியோ திரைப்படம் முறியடித்துள்ளது. லியோ படத்தின் ப்ரீ புக்கிங் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.
ரிலீஸுக்கு முன்பே இதுவரை ரூ. 28 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள லியோ, USA-வில் மட்டுமே இதுவரை $ 910K வசூல் செய்துள்ளது. இதன்மூலம் துணிவு படத்தின் ஒட்டுமொத்த USA வசூல் சாதனையையும் லியோ படம் முறியடித்துள்ளது.

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
