கமலின் விக்ரம் படத்தின் மொத்த வசூலை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் லியோ.. தமிழக வசூல் விவரம்
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது திரைப்படம் லியோ. இதற்குமுன் இவர் இயக்கத்தில் உருவான மாஸ்டர் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து லியோ படத்தில் மீண்டும் இணைந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சில விமர்சனங்களுக்கு உள்ளானாலும் கூட மக்கள் இப்படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்தனர்.
முதல் நாளில் இருந்து லியோ படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 500 கோடி மயில்கல்லை கடந்துள்ள லியோ தமிழகத்தில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வசூல்
அதன்படி, லியோ படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 182 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கமலின் விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த தமிழக வசூலையும் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் லியோ படத்தின் வசூல் எந்த உச்சத்திற்கு செல்லப்போகிறது என்று.

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri
