உலகளவில் அதிரடி வசூல் செய்யும் லியோ.. இதுவரை பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் என்ன தெரியுமா
லியோ
தளபதி விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் லியோ.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித்குமார் தயாரித்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக சற்று பின்தங்கி இருந்தது.
விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் சரி விஜய்யை நாங்கள் கொண்டாடும் என ரசிகர்களால் தற்போது லியோ படம் மாபெரும் கமர்ஷியல் வெற்றியை பெற்றுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
ஆம், உலகளவில் இதுவரை ரூ. 553 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அடுத்த வாரம் வரை பெரிய படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் கண்டிப்பாக உலகளவில் லியோ படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் லியோ படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைக்குமா என்று.
You May Like This Video