ரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்த லியோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா
லியோ
லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 19ம் தேதி உலகளவில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் ரிலீஸுக்கு 40 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது என்பதை நாம் அறிவோம். இதில் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வந்தது.
ப்ரீ புக்கிங் வசூல்
இந்நிலையில், லியோ திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரஜினி, அஜித் என அனைத்து தமிழ் நட்சத்திரங்கள் படங்களின் ப்ரீ புக்கிங் வசூல் சாதனையை அசால்டாக பின்னுக்கு தள்ளிவிட்டது.

இதன்மூலம் தமிழ் சினிமாவில் ப்ரீ புக்கிங்கிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ இடம்பிடித்துள்ளது. ப்ரீ புக்கிங்கில் ரூ. 60 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ள நிலையில் கண்டிப்பாக முதல் நாள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் வர அதிக வாய்ப்புள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

You May Like This Video
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri