விஸ்வாசம் டிஆர்பி சாதனையை தொட முடியாத லியோ! ஆனால் ஜெயிலரை விட இவ்வளவு அதிகமா?
விஜய் நடித்து கடந்த வருடம் அக்டோபரில் ரிலீஸ் ஆன படம் விஸ்வாசம். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த அந்த படத்தில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், கௌதம் மேனன் என பலரும் நடித்து இருந்தனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 15ம் தேதி லியோ படம் சன் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பானது.
டிஆர்பி ரேட்டிங்
முதல் டிவி பிரீமியர் ஆன லியோ படத்தின் டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் தற்போது வெளிவந்து இருக்கிறது. 16.30 புள்ளிகள் பெற்று இருக்கும் இந்த படத்தை 13.1 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.
இது ரஜினியின் ஜெயிலர் பட டிஆர்பி ரேட்டிங்கை விட அதிகம் தான் என்றாலும் ஏற்கனவே விஸ்வாசம் படம் படைத்த சாதனையை லியோ படத்தால் நெருங்க முடியவில்லை. ஜெயிலர் படம் 15.59 புள்ளிகள் பெற்ற நிலையில் லியோ அதை விட அதிகம் பெற்று இருக்கிறது.
விஸ்வாசம் படத்தை முதல் ப்ரீமியரில் 18.14 மில்லியன் பேர் பார்த்தது குறிப்பிடத்தக்கது.