லியோ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன்பின் கைதி படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.
இதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து மாஸ்டர் படத்தை எடுத்தார். மூன்று வெற்றி படங்களை கொடுத்து தன்னுடைய மானசீக குருவான கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார்.
இப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது. இதை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லோகேஷ் லியோ படத்தை இயக்கி இன்று இப்படம் ரூ. 550 கோடி மயில்கல்லை தொட்டுள்ளது.
இப்படி தொடர்ந்து பல சாதனைகளை செய்து வரும் லோகேஷ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.
Red Card காட்டப்பட்டு பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப் வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?
சொத்து மதிப்பு
இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 40 கோடி வரை இருக்கும் என தகவல் கூறப்படுகிறது.
மேலும் இவர் தற்போது இயக்கவுள்ள தலைவர் 171 படத்திற்கு ரூ. 45 கோடி சம்பளமாக வாங்கப்போவதாக என்றும் தகவல் வெளியாகியுள்ளது.