இலங்கையில் ஜெயிலரிடம் தோல்வியை சந்தித்த லியோ.. வசூல் விவரம் இதோ
லியோ வசூல்
முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய லியோ அதற்க்கு அடுத்த நாட்களில் சற்று பின்தங்கியது.
இதுவரை உலக அளவில் ரூ. 570 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை லியோ நிகழ்த்தியுள்ளது.
ஆனால், ஜெயிலர் படத்தின் மொத்த வசூல் சாதனையையும் இதுவரை முறியடிக்கவில்லை. இதை தொடர்ந்து தற்போது இலங்கையிலும் ஜெயிலர் படத்தின் வசூல் முன் லியோ படத்தின் வசூல் தோல்வியை சந்தித்துள்ளது.
இலங்கை வசூல் விவரம்
ஆம், ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இலங்கையில் ரூ. 20.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. நம் இந்திய நாட்டின் மதிப்பின்படி ரூ. 5.5 கோடி வசூல் வந்துள்ளது.
ஆனால், லியோ இதுவரை இலங்கை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 17.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.
நம் இந்திய நாட்டிற்கு மதிப்பிற்கு ரூ. 4.5 கோடி ஆகும். இதன்மூலம் இலங்கையில் ஜெயிலரிடம் தோல்வியை சந்தித்த லியோ என கூறப்படுகிறது.
You May Like This Video