ஜெயிலர் வசூலை தொடமுடியாமல் தவிக்கும் லியோ.. முதல் வாரம் இப்படியொரு நிலைமையா
லியோ - ஜெயிலர்
லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடுத்துவிடுமா என்ற பேச்சு லியோ ரிலீஸுக்கு முன் இருந்தே துவங்கிவிட்டது.
கடந்த 19ஆம் தேதி திரைக்கு வந்த லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட மக்களின் பேராதரவோடு வசூலில் சக்கபோடு போட்டு வருகிறது.
குறிப்பாக வெளிநாட்டில் முதல் நாள் வசூலில் பல சாதனைகளை படைத்தது. ஆனால், இரண்டு நாளில் இருந்து சற்று பின்தங்கியுள்ளது லியோவின் வசூல்.
வசூல் விவரம்
ஆம், முதல் வாரம் வரை லியோ திரைப்படம் USA மற்றும் கனடா இரு நாடுகளிலும் 3.7 மில்லியன் வரை வசூல் செய்துள்ளது. ஆனால், ஜெயிலர் முதல் வாரம் USAவில் மட்டுமே 4 மில்லியன் வரை வசூல் செய்திருந்தது.
இதன்மூலம் முதல் வாரம் ஜெயிலரிடம் வசூல் ரீதியாக பின்தங்கியுள்ளது லியோ. மேலும் நேற்று[3வது நாள்] மட்டுமே USA மற்றும் கனடாவில் லியோ படம் 0.5 மில்லியன் வரை வசூல் செய்துள்ள நிலையில் ஜெயிலர் வெளிவந்து மூன்றுவது நாளில் USAவில் மட்டுமே 1 மில்லியன் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video