முதல் நாள் இலங்கையில் லியோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. வேற லெவல் மாஸ்
லியோ
தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்றாலே அது மாஸ் தான். ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் மாபெரும் வெற்றியடைய அதை தொடர்ந்து தற்போது லியோ வெளியாகியுள்ளது.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தாலும், பல கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட வசூலில் லியோ தாறுமாறாக சாதனை செய்து வருகிறது என்று தான் சொல்லவேண்டும்.
இலங்கை வசூல் விவரம்
முதல் நாள் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இலங்கையில் லியோ திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இலங்கையில் முதல் நாள் மட்டுமே ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம் லியோ. அதுவே நம் நாட்டின் காசுக்கு ரூ. 1.5 கோடி வரை லியோ வசூல் செய்துள்ளது என்கின்றனர். இனி வரும் நாட்களில் லியோ எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்ய போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.