மலேசியாவில் தோல்வியடைந்த லியோ.. இத்தனை கோடி நஷ்டமா
லியோ
லியோ படம் இதுவரை வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. உலகளவில் ரூ. 578 கோடி வரை வசூல் செய்துள்ள லியோ பல இடங்களில் பிரேக் ஈவன் ஆகியுள்ளது.
மேலும் பல இடங்களில் இதற்குமுன் இருந்த மற்ற படங்களின் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளி புதிய சாதனையையும் படைத்துள்ளது. விஜய்யின் கெரியலில் ரூ. 500 கோடியை தொட்ட ஒரே படமும் லியோ தான்.

பல இடங்களில் லாபத்தை கொடுத்துள்ள லியோ முக்கிய இடத்தில் நஷ்டத்தை சந்திக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தனை கோடி நஷ்டமா
மலேசியாவில் இதுவரை லியோ படம் ரூ. 23.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால், ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே தான் நஷ்டத்தில் இருந்து லியோ தப்பிக்கும் என்கின்றனர்.

அதற்கு இன்னும் ரூ. 1.5 கோடி வரை தேவைப்படுகிறது. ஆனால் ரூ. 1.5 கோடி இதற்குமேல் வசூல் செய்ய வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது பரவலாக பேசப்பட்டு வந்தாலும், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri