இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வெளியாகாத இடத்தில் வெளிவரும் லியோ.. விஜய் தான் First
லியோ
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அதை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி லியோ படத்தில் இணைந்துள்ளது.
இதுவே இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. உலகளவில் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
அதே போல் உலகளவில் ரூ. 434 கோடி வரை லியோ படத்தின் பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என்கின்றனர். இதனால் கண்டிப்பாக வரலாறு காணாத வசூல் சாதனையை லியோ படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தான் First
இந்நிலையில், இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை லியோ செய்துள்ளது. ஆம், இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களும் வங்காளதேசத்தில் வெளிவந்ததே இல்லை.
ஆனால், முதல் முறையாக லியோ திரைப்படம் வங்காளதேசத்தில் வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர். இதன்மூலம் முதல் தமிழ் திரைப்படமாக லியோ தான் வங்காளதேசத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்! IBC Tamilnadu
