போற போக்க பார்த்தா 600 கோடி கன்பார்ம் போலேயே.. லியோ படத்தின் இதுவரை வசூல்
லியோ
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி ஏற்கனவே வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் மாஸ்டர். இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி லியோ படத்தில் இணைந்துள்ளது.

இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
ஆனாலும் கூட வசூலில் எந்த ஒரு பாதிப்பும் லியோ படத்திற்கு ஏற்படவில்லை. இதனால் இதுவரை வசூலில் புதுப்புது சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருகிறது.

வசூல் விவரம்
இந்நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 590 கோடிக்கும் மேல் லியோ படம் வசூல் செய்துள்ளது. போற போக்க பார்த்தா 600 கோடியை கண்டிப்பாக லியோ படம் தொடும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.