லியோ படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல்
லியோ
கடந்த சில ஆண்டுகளில் விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது லியோ தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவரை முற்றிலுமாக மாற்றி நடிக்க வைத்திருந்தார்.

அதே போல் லியோ படத்தில் விஜய்யை எப்படி காட்டியுள்ளார் என பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த டிரைலர் மூலமாகவே லியோ படம் எப்படி இருக்க போகிறது என தெரிந்துவிட்டது.

இதனால் இப்படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பும் இன்னும் அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும். லியோ திரைப்படம் உலகளவில் ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பட்ஜெட்
இந்நிலையில், இப்படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று தெரியவில்லை. முதல் முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்.

இதில், லியோ படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி வரை இருக்கும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட விஜய் திரைப்படமாக லியோ மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu