ஹிந்தியில் மட்டுமே லியோ இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா.. எவ்வளவு தெரியுமா
லியோ
இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவான இப்படம் கடந்த வாரம் வெளிவந்தது.
சில கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும், மக்கள் தங்களுடைய பேராதரவை கொடுத்து வருகிறார்கள்.

உலகளவில் ரூ. 400 கோடி மயில்கல்லை தாண்டியுள்ள லியோ இன்னும் சில நாட்களில் ரூ. 500 கோடியை கடந்து வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் ரூ. 200 கோடியை கடந்து வசூல் செய்யவும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
அமிதாப் பச்சனுடன் நடிப்பது குறித்து பேசிய ரஜினிகாந்த்.. படப்பிடிப்பில் இருந்த அவரே வெளியிட்ட புகைப்படம்
ஹிந்தி வசூல்
இந்நிலையில் வசூலில் மாஸ் காட்டி வரும் லியோ படம் ஹிந்தியில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை ஹிந்தியில் லியோ படத்திற்கு தொடருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.