இதுவரை லியோ செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் விஜய்
லியோ
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
சில கடுமையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என பல வசூல் சாதனைகளை லியோ தொடர்ந்து செய்து வருகிறது.
வசூல்
இந்நிலையில் உலகளவில் லியோ படம் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படம் உலகளவில் இதுவரை ரூ. 586 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த வார இறுதியில் லியோ படத்தின் வசூல் இன்னும் கூட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் லியோ இறுதி வசூல் எந்த உச்சத்தை தொடப்போகிறது என்று.