இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது.
இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாற்றம்
இப்படத்தின் மூன்றாம் கட்ட பட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்கு பிரசாத் ஸ்டூடியோ முன் கூட்டம் கூடியுள்ளனர்.
இதனால் லியோ படத்தின் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்படுகிறதாம். மேலும் ரசிகர்களின் இந்த செயலால் விஜய் அப்செட்டில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடப்பதற்கு பதிலாக ஹைதராபாத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர்.

சிரஞ்சீவி பக்கத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!