லியோ இரண்டாம் பாதி நன்றாக இல்லையா, வெடித்த சர்ச்சை
லியோ
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உலக தமிழர்கள் அனைவரும் காத்திருக்கும் படம் லியோ. இப்படம் எப்படியும் ரூ 1000 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவிற்கு புதிய புத்துணர்ச்சியை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக லியோ குறித்து பல சர்ச்சைகள் சுற்றி வருகிறது, அதில் ஒன்றாக லியோ படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் மிரட்டி வாங்க நினைக்கிறது என்று ஒரு பிரபலம் டுவிட் செய்தார்.
மறுப்பு
இதற்கு உடனே லியோ தயாரிப்பாளர் தரப்பில் மறுத்து டுவிட் செய்தனர், தற்போது லியோ படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை, அதனால் தான் படத்தை ப்ரோமோட் செய்யவில்லை மற்ற மொழிகளில் என்று சில விஷமிகள் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
யாருப்பா நீங்கெல்லாம்
அவர்கள் எல்லாருக்கும் ஒன்று தான் சொல்ல வேண்டும், லியோ இன்னும் எடிட்டிங் வேலையில் தான் உள்ளது, அனிருத் இன்னும் பின்னணி இசையை தொடங்கவில்லை.
அப்படியிருக்கும் போது எந்த படத்தை யார் பார்த்தார்கள் என்பது தான் கேள்வி, லியோ படம் பற்றி வரும் வதந்திகள் வெறும் வதந்திகள் மட்டுமே.