நான்கு நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே லியோ இத்தனை கோடி வசூலா.. மாஸ் காட்டும் விஜய்
லியோ
தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்தனர்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான லியோ சில கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூலில் இதுவரை உலகளவில் ரூ. 400 கோடியை நெருங்கிவிட்டது.
லியோ வெளியான அதே தினத்தில் வெளிவந்த சிவராஜ்குமாரின் கோஸ்ட் படம்!..3 நாட்களில் இவ்ளோ தான் வசூல் செய்ததா?
வெளிநாட்டு வசூல்
இந்நிலையில், உலகளவில் பட்டையை கிளப்பி வரும் லியோ படம் வெளிநாடுகளில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, லியோ படம் வெளிவந்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் வெளிநாடுகளில் ரூ. 145 முதல் ரூ. 150 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.