லியோ படத்தின் ப்ரீ புக்கிங் இத்தனை கோடியை கடந்துவிட்டதா.. வசூல் சாதனை படைத்த விஜய்
லியோ
மாபெரும் எதிர்பார்ப்பில் வருகிற 19ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து Youtubeல் பட்டையை கிளப்பியுள்ளது.
இதுவரை அனைத்து மொழிகளிலும் 50 மில்லியன் பார்வையாளர்களை லியோ படத்தின் டிரைலர் கடந்துவிட்டது. இந்த டிரைலர் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
இதுவரை பார்த்திராத தளபதி விஜய்யை டிரைலரில் பார்த்தோம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். லியோ படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கி பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
ப்ரீ புக்கிங்
இந்நிலையில், தற்போது உலகளவில் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
இதனால் முதல் நாள் உலகளவில் லியோ படத்திற்கு இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை லியோ படம் செய்யும் என படக்குழு எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
