திருப்பூர் சுப்ரமணியம், தனஞ்செயன் உடன் இதுதான் பிரச்சனை.. போட்டுடைத்த லியோ தயாரிப்பாளர் லலித்
விஜய்யின் லியோ படத்தின் வசூல் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. அதற்கு காரணம் திருப்பூர் சுப்ரமணியம், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட கொடுத்த பேட்டி தான்.
தியேட்டர்களிடம் 80 சதவீதம் வாங்குகிறார்கள் என திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். மேலும் முதல் காட்சிக்கு 1000 ரூபாய்க்கு டிக்கெட் விற்க வேண்டும் என தயாரிப்பாளர் சொல்கிறார் என பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி கொடுத்து இருந்தார்.
லலித் பேட்டி
இந்நிலையில் லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் அளித்திருக்கும் பேட்டியில் சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ளார்.
"திருப்பூர் சுப்ரமணியம் லியோ படத்தின் கோயம்புத்தூர் ஏரியா உரிமையை கேட்டார், அதை நான் தரவில்லை என்பதால் இப்போது இப்படி பேசுகிறார்."
"வாரிசு படத்திற்கு வாங்கிய அளவுக்கு தான் நான் 96 சதவீத தியேட்டர்களில் வாங்கி இருக்கிறேன், மீதம் இருக்கும் சில தியேட்டர்கள் ஏசி இல்லாத தியேட்டர்கள், அங்கு முதல் நாள் மட்டுமே கூட்டம் வரும். அதனால் தான் 80 சதவீதம் terms பேசி வாங்கினோம்."
"தனஞ்செயன் என்னிடம் வந்து தான் நடிகர் ஜெய்யை வைத்து ஒரு படம் தயாரிப்பதாகவும், அதை ரிலீஸ் செய்து தரும்படி கேட்டார். நான் லியோவில் பிசியாக இருப்பதால் முடியாது என கூறிவிட்டேன். அதனால் தான் இப்போது இப்படி பேசுகிறார்" என லலித் கூறி இருக்கிறார்.
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)
சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
![பாவங்களை போக்க புனித நீராடினாரா பிரதமர் மோடி ? பிரகாஷ் ராஜ் போட்ட சர்ச்சை பதிவு - வைரல்!](https://cdn.ibcstack.com/article/dfdd6cf6-3427-4f0e-b5c4-0f7ddac966d5/25-67a43acc95ebf-sm.webp)
பாவங்களை போக்க புனித நீராடினாரா பிரதமர் மோடி ? பிரகாஷ் ராஜ் போட்ட சர்ச்சை பதிவு - வைரல்! IBC Tamilnadu
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)