கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் லியோ நான்கு நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
லியோ வசூல்
தமிழ்நாடு மற்றும் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது லியோ. சில இடங்களில் லியோ படத்தின் வசூல் குறைத்தாலும் பல இடங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக வெளிநாடுகளில் இதுவரை ரூ. 145 கோடிக்கும் மேல் லியோ வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டை தாண்டி தென்னிந்திய அளவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் கடந்த நான்கு நாட்களில் லியோ படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.
தென்னிந்திய வசூல் விவரம்
கேரளாவில் ரூ. 31 கோடி, கர்நாடகாவில் ரூ. 30 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்குகானாவில் ரூ. 35 கோடி வரை லியோ திரைப்படம் வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களில் இந்த மாநிலங்களில் லியோ படத்திற்கு இதே அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.