லியோ படத்தின் கதை மாற்றப்பட்டதா.. உண்மையை உடைத்து கூறிய தயாரிப்பாளர்
லியோ
லலித் கடந்த 19ஆம் தேதி திரைக்கு வந்த லியோ திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் கூட, சில கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது.
ஆனால் அது எந்த வகையிலும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை. இரண்டு நாட்கள் முடிவில் உலகளவில் ரூ. 210 கோடிக்கும் மேல் லியோ திரைப்படம் வசூல் செய்து பாக்ஸ் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில், லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லியோ படத்தின் கதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டதாக பேசியுள்ளார்.
கதையில் ஏற்பட்ட மாற்றம்
இதில் 'லோகேஷ் முதலில் விஜய் சாரிடம் கதையை சொல்லி ஓகே செய்தபின், நானும் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷ் இருவரும் படத்தின் கதையை கேட்டோம், பிடித்திருந்தது. அதன்பின் நான் விஜய் சாரிடம் பேசினேன்’.
’அப்போது கதையில் சிறு சிறு இடங்களில் மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் என விஜய் சாரிடம் கூறினேன். அதன்பின் விஜய் சார் லோகேஷிடம் பேசினார். அதை ஏற்றுக்கொண்ட லோகேஷ் கதையில் சில இடங்களில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வந்தார்' என கூறியுள்ளார்.