சூப்பர்ஸ்டார்-னா ஒருத்தர் தான், தல-ன்னா.. லியோ மேடையில் விஜய் அதிரடி பேச்சு
லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் மேடையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என தொடர்ந்து சர்ச்சை வரும் நிலையில் அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.
சூப்பர்ஸ்டார் ஒருத்தர் தான்..
"புரட்சி தலைவர்-னா ஒருத்தர் தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருத்தர் தான். நடிகர் திலகம்-னா ஒருத்தர் தான். உலகநாயகன் என்றால் ஒருத்தர் தான், சூப்பர்ஸ்டார் என்றால் ஒருத்தர் தான். தல என்றால் ஒருத்தர் தான்."
"தளபதி என்றால் உங்களுக்கு தெரியும். மன்னர்ககளுக்கு கீழ் அவங்க இருப்பாங்க. இங்கே மக்கள் தான் மன்னர்கள்" என விஜய் கூறி தனது பேச்சை முடித்து இருக்கிறார்.
இதன் மூலமாக சர்ச்சைகளுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.